Breaking
Sat. Dec 21st, 2024
(JM.HAFEEZ)
‘முஸ்லீம்களின் வரலாறு பற்றித் தெரியதவர்களாலே முஸ்லீம்கள் பற்றி தவறான அபிப்பிராயம் பரப்பப் படுகிறது. இது தேசிய ஒற்றுமைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்று கலுத்துறை மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் பாலித தேவப்பெருமா தெரிவித்தார்.(23.8.2013)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19 வது தேசிய மகாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய நூதன சாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கலுத்துறை மாவட்ட தமிழர்களின் பிரச்சினை பற்றி பேச இன்று யாரும் இல்லாத ஒரு நிலை தோன்றியுள்ளது. சில வாரங்களுக்கு முன் அவர்கள் காளி கோவிலில் ஒரு கடவாவைப் பலியிட வந்திருந்தனர். இது அவர்களது சமய நம்பிக்கை. மிருகங்களைக் கொள்வதில் எனக்கு உடன் பாடு இல்லாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள ஒரு சகோதர இனம் என்ற வகையில் அவர்களது சமய உரிமையை நாம் தடுக்க முடியாது.
ஆனால் எமது நாட்டிலுள்ள ஒரு சண்டித்தனம் காட்டும் பௌத்த அமைப்பு அதனை தடுக்க முற்பட்ட போது அங்கு சென்ற நான் அவர்களுக்கு உதவி செய்து அப்பணியை ஆரம்பித்து வைத்தேன். ஏனெனில் மிருக பலியை தடுப்பதை விட எனக்கு தேசிய ஒற்றுமை பெரிதாக இருந்தது. மேற்படி செயற்பாட்டை நிறைவேலற்றிய பின் ஒரு வயோதிப மாது என்னிடம் வச்து நீங்கள் தான் வந்து காளியம்மாவாக எமது கடனை நிறைவேற்றினீர்கள். எனவே எமது காளி தெய்வம் நீங்கள்தான் என்றனர். அந்தளவு அவர்களது சமய நம்பிக்கை இருந்ததுடன் அதனை மறுத்தால் அவர்களது மனம் தளர்ச்சியடையும்.
எனவே ஒரு இனத்தைத் தாழ்த்தி இன்னொறு இனம் வாழ நினைப்பது தவறாகும். அப்படி வாழவும் முடியாது. முன் எம்மிடையே சில உயர்ந்த பன்பாடுகள் இருந்தன இன்று அவை மாறிவிட்டன. இன ரீதியாக நாம் பிரிந்தால் ஒரு வயோதிப மாது கூட தனியாக ஒரு பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இந்தியாவில் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உயர்ந்த எண்ணம் உண்டு. நாமும் அது போல் சகலரும் இலங்கையர்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
சுதந்திரத்திற்கு முன் 1945ம் ஆண்டளவில் எமக்கு டொமினிகன் அந்தஸ்த்து வழஙடகும் போது கலாநிதி டி.பி.ஜாயா ஆற்றிய உரை மிக முக்கிய மான ஒன்று. இன ரீதியாக எம்மை பிரித்து மேற்கத்திய அரசு எம்மை பிரித்தால முயற்சித்தது. அவ்வேளை எமக்கு முதலில் சுதந்திரம்தான் வேண்டும். அதன்பின் எமது பிரச்சினைகளை நாம் பேசித் தீர்ப்போம் என்றார். டி.பி ஜாயா, ஸர் றாசிக் பரீத், டாக்டர் எம்.சி.எம். கலீல் போன்றவர்கள் காட்டிய முன் மாதரி  முக்கிய மானதாகும்.
கடந்த யுத்தகாலத்தில் 96 முஸ்லீம் இராணுவ வீரர்கள் தமது உயிரைப் பறி கொடுத்துள்ளனர். ஒல்லாந்தர் காலத்தில் ஒரு முஸ்லிம் பெண்மணி சிங்கள அரசனை காட்டிக் கொடுக்காத காரணத்தால் அவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வரலாறு உண்டு. அதன் காரணமாக சிங்கள மன்னன் அத்தாயின் இரத்தத்தைப் பாhத்து ‘மாரெக்கலே’ (என்னைப் பாதுகாத்த இரத்தம்) என்றான். அது இன்று ‘மரக்கலே’ ஆக திரிபடைந்துள்ளது.
இச்சரித்திரம் கூடத் தெரியாதவர்கள் தான் அலுத்கமயில் வைத்து  ‘மரக்கல கடவலட அபசரணை’ என்றனர்.

Related Post