சவூதியில் இக்காமா முறை ஒழிக்கப்பட இருப்பதாகவும், இனி அலைக்கழிப்புகள் இல்லை என்பதாகவும், இதனால் வங்கி பரிவர்த்தனை முதல் பல்வேறு நலன்கள் ஏற்படப்போவதாகவும் நேற்று நமது வலைதளத்தில் செய்தி வெளியிட்டோம்.
இது பற்றி சவூதி அரபியாவிலிருந்து பைசல் முஹம்மது என்பவர் தரும் விரிவான விளக்கம்.
இக்காமா என்ற பெயர் தான் “Resident identity card” என்று மாற்றப்படுகிறதே தவிர, வேறு எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல, வருடாவரும் இதனை புதுப்பிக்க (Renew) தான் வேண்டும். புதிதாக வழங்கப்பட உள்ள அட்டையில் காலாவதி தேதி (Expiry Date) குறிப்பிடப்பட்டிருக்காது. ஆனால், நாம் புதுப்பிப்பதற்கேற்ப, அதற்கான கருவிகளில் வைத்து பார்க்கும்போது காலாவதி தேதி தெரிய வரும். மேலும், நாம் SMS, வெப்சைட் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.இந்த புதிய அட்டையை மாற்றாமல், 5 வருடம் வரை வைத்திருக்கலாம். அவ்வளவுதான்… வருடாவருடம் புதுப்பிக்காவிட்டால், நாம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ அத்தனையும் சந்திக்க நேரிடும்… கஃபீலிடம் (அல்லது நிறுவனத்திடம்) சென்று ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க என்னென்ன வகையில் போராட வேண்டுமோ அவற்றையும் செய்யத்தான் வேண்டி வரும்…
புதுப்பித்தபிறகு, வங்கிகளில் மற்றும் மணி எக்ஸேஞ்சுகளில் சென்று புதிய காலாவதி தேதியை பதியத்தான் வேண்டும்…
ஒவ்வோர் வருடமும், ஜவசாத்தில் (சவூதி பாஸ்போர்ட் அலுவலகம்) புதிய அட்டை பிரிண்ட் செய்து பெற கூட்டம் அதிகமாவதால், அங்கு கூட்டத்தை குறைக்கவும், சவூதி முஆக்கபுகள் (Representatives) -இன் வேலையை குறைக்கவுமே இந்த ஏற்பாடு… smile emoticon
மேலும் விபரங்களுக்கு கீழே செய்யவும்.
www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20150619247786