Breaking
Sat. Nov 16th, 2024

– மௌலவி செய்யது அலி ஃபைஜி –

உலகத்தில் பணத்தின் தேவைகள் இல்லாதவர்களே கிடையாது, அதனால் பணத்தின் மீது ஆசை வைக்காதவர்களை பார்க்க முடியாது.

ஆனால் இஸ்லாம் அந்த ஆசைக்கும் அணை போடுகிறது.

பணத்தை மனிதன் விரும்பலாம், அது அவனுக்கு உரியதாக இருக்க வேண்டும், அவன் உழைத்து உருவாக்கியதாக இருக்க வேண்டும், அனுமதிக்கபட்ட முறையில் அவனுக்கு அது கிடைத்ததாக இருக்க வேண்டும்.

தாம் சம்பாதிக்காத பணத்தை தவிர ஏனைய பிறரின் பொருளாதாரத்தை இஸ்லாம் புனிதமாக கருத சொல்கிறது.

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,

பிறரின் பொருளாதாரத்தை மக்காவுக்கு இணையாக, துல்ஹஜ் மாதத்திற்கு இணையாக, துல்ஹஜ் பிறை 9 க்கு இணையாக புனிதமாக கருத வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

நபிகளாரின் வார்த்தையை பின்பற்றும் முஸ்லிம்கள் நேர்மையின் உச்சமாக வாழ்வார்கள்.

அந்த வகையில் பிரிட்டனில் டாக்ஸி டிரைவராக இருப்பவர் முஹம்மது நிஸார்,

அவருடைய காரில் பயணித்த ஒருவர் தம்முடைய பணத்தை தவற விட்டு சென்று விடுகிறார், அந்த பணத்தின் மதிப்பு அமெரிக்க டாலரில் 16 ஆயிரம் டாலர்,

அந்த பணத்தை கண்டெடுத்த முஹம்மது நிசார் சம்பந்தப்பட்டவரை நேரில் சென்று அந்த பணத்தை ஒப்படைக்கிறார்,

தவற விட்டவர் மெய் சிலிர்த்து போகிறார், வாடகைக்கு வாகனம் ஓட்டும் இவரிடம் இவ்வளவு நாணயமா என எண்ணி மகிழ்கிறார்.

அவரை பாராட்டுகிறார், பரிசுகளை வழங்க முன்வருகிறார், முஹம்மது நிஸார் பரிசை வாங்க மறுத்து தனது மார்க்க கடமையை செய்ததற்காக நான் உலகில் எந்த பரிசையும் வாங்க விரும்பவில்லை, மறுமையில் அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்கிறேன் என கூறுகிறார்.

பணத்தை தவற விட்டவர் முஹம்மது நிசாரை கட்டியணைத்து இந்த உலகத்தில் என்னுடைய சிறந்த நண்பன் என்று கௌரவிக்கிறார்.

நேர்மையின் மறுப்பெயர் முஸ்லிம், இது தான் இஸ்லாம்.

Related Post