Breaking
Mon. Dec 23rd, 2024

அஸ்ரப் ஏ சமத்

20வது அரசியல் திருத்தம் பற்றி இன்று பாராளுமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –
இந்த நாட்டில் இருக்கின்ற இரண்டு பிராதான அரசியல் கட்சிகளும் சேர்ந்து சிறுபான்மைச் சமுகத்தின் அரசியல் அபிலாசைகளை நசுக்கிவிடாதீர்கள்.
ஒரு நல்லாட்சி ஏற்பட வேண்டுமென்று ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமுகமும் ஒருங்கிணைந்து மைத்திரிபால சிறிசேனாவை இந் நாட்டுக்கு ஜனாதிபதியாக்கினார்கள்.

சிறுபான்மைச் சமூகம் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காமையால் இதைக் காரணமாக வைத்துக்கொண்டு ஸ்ரீ.ல.சு.கட்சியினர் அதனோடு கூட்டினைந்த கட்சிகள் எல்லாம் பழிவாங்கத் துடிக்கின்றன்ரனரா? என்ற சந்தேகத்தையும் எழுப்பவேண்டியுள்ளது. இந்தச் சட்டம் சபையில் வரவேண்டும.; என்றும் தேர்தல் சட்டம் திருத்தப்படல் வேண்டுமென்று எமக்கு கணிசமான உடன்பாடு உள்ளது. ஆனால் அந்த உடன்பாடு எனபது தேசியத்தில் இருக்கின்ற சிறுபான்மைச் சமுகத்தின் விகிதாசாரத்திற் கேற்ப பாராளுமன்ற பிரநிதித்துவம் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாநாயகத்தைப் பற்றி பேசுகின்ற பௌத்த தலைவர்களுக்கும் அந்த தார்மீகப் பொறுப்பு உள்ளது. என்பதை இந்த பாராளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த மாற்றம் தொடர்பான பிரேரனையை அவசர அவசரமாக அமைச்சரவைக்கு அனுப்பட்டது. அன்று அமைச்சரவையில் அதில் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களான ரவுப் ஹக்கீம், திகாம்பரம் நான் உட்பட, கடுமையாக எதிர்த்தும் கூட ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலமை ஏற்பட்ட கனம் சிறுபான்மைச் சமுகத்திற்கு ஒரு கவலைக்குரிய நாளாக அதனை நான் பார்க்கின்றேன்.
இந்த நியாயமான மாற்றங்கள் நிகழவேண்டும் என்று எங்களுக்கு உடன்பாடு உள்ளது. இல்லையெனில் பனம்பலத்தை அல்லது, பொலிஸ் பலத்தை வைத்துஅரசியலில் செய்யலாம் என்கின்றவர்களுக்குத்தான் இப்போதைய தேர்தல் சர்ந்தாப்பத்தினை ஏற்படுத்தியது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2004ல் பொதுத்தேர்தலின்போது கல்குடா முஸ்லீம் பிரதேசங்களில் அப்பொழுது பொலிஸ் அத்தியட்சகராக இருந்த திரு ‘மார்க்’ தலைமையில் நடந்த அடாவடித்தனமான நடவடிக்கையின் கார்ணமாக கல்குடாதொகுதியில் உள்ள முஸ்லீம்கள் பி.பகல் 02.00 மணிக்குப் பிறகு அந்தப் பிரதேசத்தில் யாரும் வாக்களிகக் முடியாத நிலைமையை திரு மார்க் குழு தடுத்துநிறுத்தியது. இந் நடாகத்தை அவர் சிறப்பாக அரங்கேற்றினார் இதனால் கல்குடா மக்களுடைய அரசியல் பிரநிதித்துவம் பறிபோனது. அதனால் தான் நான் தோல்வியடையவும் நேர்ந்தது.

இவ் விடயம் தொடர்பான ஆதாரங்களையும், அறிக்கையும் எதிர்காலத்திலேயே இந்தப் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கலாம். என நினைக்கின்றேன்.
ஜனாநாயக விரோத செயற்பாடுகளின் பனம் படைத்த அல்லது பொலிஸ் பலத்தை வைத்து சாதிக்கலாம். என்ற நிலைமை எதிர்காலத்தில் வரயிருக்கின்ற தேர்தல் மாற்றம் இல்லாது ஒழிக்கவேண்டும்.

இத்தேர்தல் முறையினால் முஸ்லீம் சமுகம் மட்டுமல்ல மலைய தமிழர்கள், இலங்கை வாழ் தமிழர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். என்பதை நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள். என நினைக்கிறேன்.

இந்த நல்லாட்சியில் சிறுபான்மைச் சமுகத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்றது. என்ற நிலமை இல்லாது ஒழிக்கப்படல் வேண்டும்.;. என்ற உறுதிப்பாட்டோடு எல்லோரும் செயல்படுவோமேயனால் நாம் எல்லோரும் ஒரே நாளில் தீர்மானத்திற்கு வந்துவிட முடியும்.
இந்தச் சபை கடந்த காலங்களில் எத்தனையோ விவாதங்களை கண்டிருக்கின்றது. ஆனால் இந்த விவாதம் என்பது சிறுபான்மைச் சமுகங்களுக்குரிய உயிர்மூர்ச்சை தக்க வைத்துக் கொள்கின்ற விவதாகமாகவே இதை நான் பார்க்கிறேன். என பிரதியமைச்சர் அமீர் அலி அங்கு உரையாற்றினார்.

Related Post