தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தகுதிச் சான்றிதழ் இன்றி எந்தவொரு நபரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதென அதன் தலைவர் டொக்டர் சமீர நிலங்க சமரசிங்க நேற்று தெரிவித்தார்.
இது குறித்த விபரங்களை திரட்டுவதற்காக நாடு முழுவதும் 200 குழுக்கள் நியமிக்கப்பட் டிருப்பதாவும் அவர் கூறினார். பெப்ரல் அமைப்பின் பிரகடனத்தின்படி வேட்பு மனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு நபரும் போதைக்பொருள் பாவனை, விற்பனை, விநியோகத்துடனான தொடர்பு, மதுபான விற்பனை நிலையம் மற்றும் எந்தனோல் இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரம், கெசினோ அனுமதிப் பத்திரம் ஆகியவற்றை கொண்டிருத்தலாகாது.
இந்த பிரகடனத்தை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படும் வகையில் எமது தேசிய அபாயகர ஓளடத கட்டுப்பாட்டுச் சபையானது தனி நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் போதைப் பொருளுடன் தொடர்புடைய தகவல்களை திரட்டி சேகரித்து வைக்கும் தரவுக் களஞ்சியமாக செயற்படுமென்றும் அவர் கூறினார்.
இதற்கான உத்தியோகபூர்வ அடித்தளம் ஜூலை 26 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும்.
அதற்கமைய வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு தனிநபரினதும் போதைப் பொருளுடன் தொடர்புபட்ட பின்னணி குறித்த தகுதிச் சான்றிதழை கட்சித் தலைவர்களுக்கு வழங்க நாம் கட்டுப்பட்டுள்ளோமென்றும் அவர் தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறையமைச்சில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
போதைப் பொருள் பாவனை கடத்தல் மற்றும் விற்பனையாளர்களுக்கும் கெசினோ மற்றும் மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் உடையவர்களுக்கும் வேட்புமனுக்கள் வழங்குவதில்லையென்ற பெப்ரல் அமைப்பினால் கடந்த மார்ச் 12ம் திகதி வெளியிட்ட பிரகடனத்திற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்து கைச்சாத்திட்டிருந்தனர்.
இது வெறும் பிரகடனமாக மட்டுமன்றி ஆக்கப்பூர்வமா னதாக செயற்படுத்தப்பட வேண்டுமென்பதற் காகவே தேசிய அபாய ஓளடத கட்டுப் பாட்டுச் சபை மேற்படி தகுதிச் சான்றிதழ் வழங்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த விருப்பதாகவும் அவர் கூறினார்.
தேர்தலில் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் பாவனை முக்கிய இடம் பிடிக்க கூடாது என்பதே எமது இந்த பயணத்தின் முக்கிய இலக்காகுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யலாமென ஊகிக்கப்பட்டிருக்கும் பலரது விவரங்களை நாம் ஏற்கனவே திரட்டி வைத்துள்ளோம். அதேவேளை, பொது மக்களும் அரசியல் வாதிகளின் போதைப் பொருள் பின்னணி தொடர்பிலான தகவல்களை எமக்கு பெற்றுத்தரமுடியும். இந்த தகவல்கள் எமது தகவல் களஞ்சியத்தில் சேகரித்து வைக்கப் படுவதுடன் எதிர்வரும் பா¡ளுமன்ற தேர்தலில் பிரயோசனமான முறையில் பயன்படுத்தப்படுமென்றும் அவர் வாக்குறுதியளித்தார்.
இதேவேளை நாட்டில் போதைப் பொருள் பாவனை, விற்பனை, கடத்தல் வலையமைப்பை முற்றாக தடை செய்வதாயின் சக்திமிக்க விசேட புலனாய்வுத்துறையொன்றின் அவசியம் உணரப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட சபைத் தலைவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ணவுடன் இணைந்து புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் களமிறங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.