திய அரசால் அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் செல்லுபடியானவை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புதிய அரசு கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி புதிய ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது.
மத்திய வங்கியின் ஆளுநரது நியமனம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நாணயத்தாளின் சட்டபூர்வ தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன், ஐயாயிரம் ரூபா நாணயத்தாளில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ளதாகவும்,அவர் சிங்கப்பூர் பிரஜை எனவும் இதனால் இந்த நாணயத் தாள் செல்லுபடியாகாது எனவும் முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவான வகையில் மத்திய வங்கியின் ஆளுநர் லக்ஸ்மன் அர்ஜூன்மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நிதிச் சட்டத்தின் 11ம் சரத்தில் மத்திய வங்கி ஆளுனராக பதவி வகிக்க தகுதியற்றவர்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் நோக்கினால் புதிய மத்திய வங்கி ஆளுநர் பதவி வகிப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒருவரின் பிரஜாவுரிமை அல்லது குடியுரிமையின் அடிப்படையில் மத்திய வங்கியின் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டுமென கூறப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இலங்கையின் முதலாவது மத்திய வங்கி ஆளுநர் ஜோன் எக்ஸ்டர் ஒர் அமெரிக்கப் பிரஜை என தெரிவித்துள்ளது.
இலங்கை நிதிச் சட்டத்தின் அடிப்படையில் புதிய அரசு வெளியிட்ட நாணயத்தாளில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது எனவும் அதன் சட்டபூர்வதன்மையில் சிக்கல்கள் கிடையாது எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.