Breaking
Fri. Nov 15th, 2024

அமெரிக்காவில் பாஸ்டன் நகரை சேர்ந்தவர் ஷோகார் சர்னேவ் (21). கடந்த 2013–ம் ஆண்டில் பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது.

அதில் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 260 பேர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து ஷோகார் சர்னேவ் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஷோகார் சர்னேவுக்கு 12 பேர் அடங்கிய மக்கள் நீதிபதிகள் குழு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் அந்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டு, அதிகாரபூர்வமாக மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி ஜார்ஜ் ஓ’டூல். மரண தண்டனை விதிக்கப்பட்ட சர்னேவ் முன்னாள் சோவியத் ரஷியாவின் கிர்கிஸ்தானை சேர்ந்தவர். அவரது குடும்பம் கடந்த 2002–ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது.

Related Post