சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களில் மாத்திரம் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
தங்காலைப் பிரதேசத்தில் இருவரும், யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மொனராகலை மாவட்டத்தை தாக்கிய வறட்சி மற்றும் கடும் காற்று காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக இந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.
மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் வறட்சி காரணமாக 53 ஆயிரத்து 512 குடும்பங்களும் கடும் காற்று காரணமாக 14 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் வரட்சி காரணமாக 36 ஆயிரத்து 882 குடும்பங்களும் கடும் காற்று காரணமாக 62 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொழும்பு, இரத்மலானை பிரதேசத்தில் கடல் அரிப்பு காரணமாக 85 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.