(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
கொழும்பு நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புறக்கோட்டை பஸ்ரியான் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக சந்தைத் தொகுதி இன்று (25) மாலை உத்யோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சுகாதரா அமைச்சர் மைத்தரிபால சிறசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான டக்களஸ் தேவானந்தா, ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த சில்வா, ஏ.எச்.எம்.அஸ்வர், மற்றும் மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், கொழுhம்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், அரச, அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள், வர்த்தக சமுகங்கள், பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.
மேற்படிக் கடைத் தொகுதிகளை உத்யோக பூர்வமாக சுகாதரா அமைச்சர் மைத்தரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டடோர் நாடவை வெட்டியும், திரையை நீக்கியும் திறந்து வைத்தனர்.
மேற்படிக் கடைகள் புறக்கோட்டையில் அகற்றப்பட்ட கடைகளுக்குப் பதிலாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலை கலாச்சார நிகழ்வுகள் இ;டம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.