கட்சியென்றால் மார்க்கம் போல் நினைக்கின்றனர்.கட்சியினை வைத்து தொழில் செய்கின்றனர்.மக்களுக்கு உதவாத கட்சி அதனை விட்டுவாருங்கள் என்றால் ஏதோ மதத்தினை விட்டுவருவதால் பிரயத்தனம் செய்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் முஹம்மத் சிசானின் கட்சி அலுவலகத்தினை நிந்தவூரில் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ இந்த முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகத்தின் விளைவு அவர் ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.இன்று மீண்டும் அவர் வந்த தான் பிரதமராக வர ஆணை கேட்கின்றார்.இவர் ஆட்சிக்கு வருவதற்கு எமது முஸ்லிம்களில் சிலர் ஆலவட்டம் வீசிக் கொண்டிருக்கின்றனர்.இவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்.
வன்னியில் பிறந்த நான் கிழக்கு மக்களின் விடிவுக்காக சிந்திக்கின்றேன் என்றால் அது எனது உணர்வால் பிணைக்கப்பட்ட விடயம்.இதனை எவராலும் பிரிக்க முடியாது.தம்பள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது நாம் சென்று அதனை பாதுகாக்க முயற்சிகளை செய்தோம்,பலரோடு நாம் முரண்பட்டோம்,எமது மதத் தளங்கள் என்பது உயிராகும்,அதற்கு எவரும் கயாம் ஏற்படுத்த அனுமதிக்கமாட்டோம்.
தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினையினை தீர்க்க விடாத சக்திகள் மிகவும் பலமாக செயற்பட்டது நகர நிர்மாண திணைக்களம்,அன்று பாதுகாப்பு செயலாளரிடத்தில் இருந்தது..ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அது
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடத்தில் கொடுக்கப்பட்டு 6 மாதங்கள் கழிந்த போதும் அந்த தம்புள்ள பள்ளி தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனையாகும்.
இப்படியான நிலையில் இன்னும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று பேசுவதில் என்ன நியாயத்தை நீங்கள் கானுகின்றீர்கள்.இந்த பிரதேசத்தில் கற்ற இளைஞர்கள் எத்தனையோ ஆயிரம் பேர்கள் தொழிலின்றி இருக்கின்றீர்கள்,இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர்,எதனையும் செய்யாது இந்த மக்களை வைத்து வெறும் அரசியல் சக்கரம் செய்துள்ளதை காணமுடிகின்றது.
இந்த நிலை மாற வேண்டும்,திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம்களின் எதிர்காலம்.அபிலாஷைகள் வந்தடைய வேண்டும்.அந்த அடைவை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உங்களுக்கு பெற்றுக்கொடுக்கும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.