றியாஸ் ஆதம்
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மைகோப் நிறுவனத்தின் பணிப்பாளருமான சித்தீக் நதீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்குமாகாண இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அண்மையில் வெள்ளவத்தை கிரான் மெரீன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கி வைத்தார்.
சமூக சேவையாளரான சித்தீக் நதீர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மருதமுனை மற்றும் நாவிதன்வெளி பிரதேச இளைஞர் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.