அஸ்ரப் ஏ சமத்
நேற்று முன்தினம் கல்வியைமச்சர் அகிலவிராஜ் காரியவாசம் சந்திப்பின்போது அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் ஆகியோர்களினால் மேற்படி பாடசாலைகளது புதிய கட்டிடங்கள் நிர்மாணிப்பதற்கு கல்வி அமைச்சர் ஏற்றுக் கொண்டார். என வை.எல். எஸ் ஹமீட் தெரிவித்தார்.
கல்முனை சாஹிராக் கல்லூரி மற்றும் மருதமுனை சம்சுலுல் ஆகிய பாடசாலைகள் சமுகத்திற்கு செய்கின்ற பங்களிப்பு தொடர்பாகவும் அதே நேரம் அப்பாடசாலைகளில் நிலவுகின்ற பௌதீக வளக் குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துறையாடினர்.
அதே நேரம் கல்முனை சாஹிராக் கல்லூரிக்கு ஒரு நவீன நிர்வாகக் கட்டிடத்தின் தேவையையும், மருதமுனை சம்சுலுல் பாடசாலைக்கு ஒரு கேட்போர் கூடத்தின் தேவையையும் கல்வியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
அந்த எழுத்து மூலமமான வேண்டுகோளையும் கையளித்தனர். அதனைக் ஏற்றுக்கொண்ட கல்வியமைச்சர் இரு பாடசாலைகள் குறித்து கட்டிடங்களது நிர்மாணப்பணிப்பதற்கான ஆரம்பக் கட்ட நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்வதகாவும் மேலதிக நிதியை அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்து தருவதாகவும் கல்வியமைச்சர் வாககுறுதியளித்தாக வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.