Breaking
Mon. Dec 23rd, 2024

பாறுக் சிகான்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி நாடளாவிய ரீதியாக 8 ஆசனங்களை வெல்லும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.சி.எம் அமீன் ஹாஜியார் தெரிவித்தார்.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக வினவியபோது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,
இவ்; ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் எமது கட்சிக்கு முக்கியமானது.இதில் 8 ஆசனங்களை கட்சி பெறுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை.இதன் மூலம் தேசிய நீரோட்டத்தில் முழுமையாக கட்சி ஈடுபடவுள்ளது.இதற்கு தமிழ் பேசும் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களிற்காக எமது கட்சி பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளது.மக்கள் சேவை நோக்கத்துடன் அது செயற்படுகின்றது.இதற்கு எடுத்து காட்டாக பலவற்றை கூறினாலும் 1990 ஆண்டு வட பகுதி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது எமது கட்சி மீண்டும் அம்மக்களிற்கான உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொடுத்தது.இதன் ஊடாக அம்மக்களின் வேலைவாய்ப்பு,வீடமைப்பு திட்டங்கள் என்பன கட்சியினால் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டன.

எனவே தான் இவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள இத்தேர்தலில் கட்சியின் தேசியத்தலைவர் ரிசாட் பதியுதீனை பலப்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.இதன் மூலம் தேசிய அரசியலில் பேரம் பேசும் சக்தியாக நாம் மாறி எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தமிழ் பேசும் மக்கள் தற்போது வாழ்ந்து வருகின்றார்கள்.இவர்களின் அடிப்படை பிரச்சினைகள் யாவும் இத்தேர்தலின் பின்னர் பகுதி பகுதியாக தீர்க்கப்படும்.கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களின் வீட்டுத்திட்டங்களில் 100 வீடுகள் கொண்ட திட்டங்கள் விரைவில் அமுல்படுத்தப்படும். மக்களின் அபிவிருத்தி இதன் ஊடாக விரைவு படுத்தப்படும்.

எனவே இதனை சாதிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எங்கு எங்கு போட்டி இடுகின்றதோ அங்கு பூரண ஆதரவு மக்கள் வழங்க வேண்டும்.அதிலும் குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் எமது கட்சி பிரபல்யமான மக்கள் பிரதிநிதிகள்,கல்வி மான்களை இணைத்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

எமது கட்சிக்கு இம்மாவட்டம் கன்னித்தேர்தலாகும்.இதில் முழுமையாக காலுன்றி நிற்க அங்குள்ள மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.இதில் பல ஆசனங்களை எதிர்பார்க்கின்றோம்.அது மாத்திரமன்றி திருகோணமலை,மட்டக்களப்பு,வன்னி பிரதேசங்களில் அதிகமான ஆசனங்கள் எமக்கு கிடைக்கவுள்ளது.

எமது கட்சியின் எதிர்கால திட்டம் தேசிய தலைவரின் கரங்களை பலப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.
தலைவர் மக்கள் சேவை செய்வதில் சர்வ வல்லமை உள்ளவர்.இதற்கு அவர் கடந்த காலம் வகித்த அமைச்சு பதவியினூடாக செய்த சேவைகள் எடுத்து காட்டுகளாகும்.

இதன் காரணமாகத்தான் உலகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி தேசிய தலைவரை சிறந்த மக்கள் சேவகன் என குறிப்பிட்டனர்.இது மக்கள் பெற்ற கௌரவமாகும்.இதன் காரணமாகத் தான் அவர் தேசிய தலைவராக மக்களால் மதிக்கப்படுகின்றார்.

எமது கட்சி ,இன ,மத பேதங்களிற்கு அப்பாற்பட்டது.எதிர்காலத்தில் நாடு பூராகவும் எல்லா சமூகத்தவர்களையும் இணைத்து கொண்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும்.இதனால் தமிழ் மக்களும் எதிர்காலத்தில் எம்முடன் அதிகமாக கைகோர்த்து வருவார்கள்.

தற்போது பாரிய வளர்ச்சியடைந்துள்ள எமது கட்சிக்காக பாடுபடும் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

எதிர்வரும் இத்தேர்தலுக்கு முகம் கொடுக்கின்ற போது இனவாத்தை நோக்கி மக்கள் செல்லாமல் வாக்களிக்க முன்னர் நன்றாக சிந்தித்து பொன்னான வாக்குகளை அளிக்க அவர்கள் முன்வர வேண்டும்.

சலுகைக்காக விலைபோகாமல் ,போராடாமல் மக்களின் உரிமைக்காக போராடக்கூடிய மக்கள் தலைவர்களை இத்தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.அவ்வாறானவர்களை தான் எமது கட்சி பல தேர்தல் தொகுதிகளிலும் தற்போது இறக்கியுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் எமது உரிமை குரலை ஓங்கி ஒலிக்க செய்ய முடியும்.
எனவே தான் கடந்த காலத்தில் பல தரப்பட்டவர்களினாலும்,சில ஊடகங்களினாலும் எமது கட்சி தலைமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அவதூறுகளை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.இவ் அவதூறு இரவு பகல் பாராது மக்கள் சேவை செய்தமைக்காக எமது தேசிய தலைமைக்கு அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் மக்கள் சக்தி கொண்டு இன்று அவை அணைக்கப்பட்டுள்ளது.எனவே தான் இத்தேர்தலில் ஊடாக அவதூறுகளை ஏற்படுத்தியவர்களை அகற்ற எமது தேசிய தலைவரின் கரத்தை பலப்படுத்த வாருங்கள் என அறைகூவல் விடுக்கின்றேன்.

Related Post