Breaking
Fri. Jan 10th, 2025

புதிய தேர்தல் முறை உள்ளடங்கிய 20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று அமைச்சரவையில் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களிடையே பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், தேர்தல் முறை தொடர்பான அரசியல் கட்சிகளின் யோசனைகளை இன்று மதியம் வரை கையளிக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

இதன்படி, தமிழ் கட்சிகளின் தலைவர்கள், மக்களின் அபிலாஷைகள் அடங்கிய யோசனைகளை ஜனாதிபதி செயலயத்தில் கையளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று முற்பகல் தமது யோசனையை கையளித்ததாக அதன் பிரதிப் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

ஜே.வி.பியியும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான தமது யோசனைகளை இன்று ஒப்படைத்துள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்தநிலையில். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி, சோசலிச மக்கள் முன்னணி, மற்றும் லங்கா சமசமாஜ கட்சி ஆகியனவும் தமது யோசனைகளை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்துள்ளன.

Related Post