Breaking
Thu. Jan 16th, 2025

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் இருவர் பலியானதுடன் 400 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மண்சரிவு காரணமாக 7 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளது.

மீரியபெத்தையில் 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புகளே இவ்வாறு மண்ணில் புதையுண்டுள்ளன.
7 ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும், 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும், 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும், 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும், 11ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும், 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட பகுதி தொடர்ந்தும் மண்சரிவுக்குள்ளாகி வருவதாகவும் தற்போது 1 கிலோமீற்றர் பகுதி மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர். (U)

Related Post