ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்கள் தமது பெயரிலுள்ள நிலுவையை தாமாகவே பரிசோதித்துக்கொள்ளும் புதிய ஏற்பாடு 06-05-2015 முதல் அமுலானது.
தொழிலமைச்சர் எஸ்.பீ. நாவின்ன நாரஹென்பிட்டி தொழில் செயலகத்தில் இந்தச் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
இதற்காக புதிதாக கருவியொன்று பொருத்தப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தமது நிலுவையை உறுப்பினர்கள் அறிந்து கொள்ளலாம்.
வேலை கொள்வோரால் சம்பளத்தில் கழிக்கப்படும் தொகையைக் கூட உறுப்பினர்கள் அறிந்து கொள்ள முடியும்.
இலக்ட்ரோனிக் முறையில் பதிவாகி உள்ள சகல உறுப்பினர்களுக்கும் இந்த வசதியை தற்போது பெற்றுக்கொள்ளலாம். இதுவரை இலக்ட்ரொனிக் முறையில் பதியாத உறுப்பினர்கள் தமது முதலாளிமார் ஊடாக தொழில் அமைச்சில் பதிவதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.
பிரதான அலுவலகத்தை விட நாட்டிலுள்ள 30 தொழில் அலுவலகங்களிலும் இந்த புதிய கருவி விரைவில் பொருத்தப்படுமென தொழிலமைச்சு தெரிவித்துள்ளது.