கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி உருவாக்கப்பட்ட பொலிஸ் நிதி மோசடி விசாணைப் பிரிவின் (FCID) நோக்கமானது நாட்டில் நடைபெறும் ஊழலை ஒழிப்பதற்காகும். அப்படிப்பட்ட FCID ஒருபோதும் முடப்படாது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், FCID மூடப்பட மாட்டாது, ஆனால் புதுப்பெயருடன் புது விடயங்களை உள்ளடக்கியவாறு மீண்டும் ஆரம்பிக்கப்படும், எனினும் இதற்கு சற்று காலதாமதம் ஆகும் என ராஜித தெரிவித்தார்.
மேலும் புது பெயருடன் வர இருக்கும் FCID பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கு அமைவாகவே இருக்கும் என்றும், வேறு பெயரில் வந்தாலும் அதே செயற்பாடுகள் காணப்படும் எனவும் இதன்போது சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.