Breaking
Tue. Dec 24th, 2024

– விஷேட நிருபர் –

காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் விளக்க மறியலில் இருந்து வந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்கும் நேற்று (24) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட போதிலும், சிறுமிக்கு சூடு வைத்ததாக கூறப்படும் சிறுமியின் வளர்ப்புத்தாய்க்கு எவரும் சரீரப்பிணை நிற்பதற்கு முன் வராததால் சிறுமியின் வளர்ப்புத்தாய் மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் விளக்க மறியலில் இருந்து வந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இவ்விருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை தலா ஒருவருக்கு 25,000 ரூபா பணமும் தலா ஒருவருக்கு நான்கு பேர் சரீரப்பிணையிலும் பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

இவ்விரு சந்தேக நபர்களும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்விருவரையும் பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

இவர்களின் பிணைக்காக நான்கு பேர் சரீரப்பிணை வழங்குவதுடன் அதில் இருவர் அரசாங்க உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டுமெனவும் இவ்விரு சந்தேக நபர்களையும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பிமிட வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை பிணையில் விடுதலையான போதிலும் சிறுமிக்கு சூடு வைக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் வளர்ப்புத்தாய்க்கு பிணை நிற்பதற்கு எவரும் முன்வராததால் மீண்டும் நீதிமன்றத்திலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சிறுமியின் வளர்ப்புத்தாய் கொண்டு செல்லப்பட்டதுடன் தொடர்ந்து அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி-6ம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி என்பவரும் மற்றும் அவரது மனைவி சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் ஆகிய இருவரும் காத்தான்குடி பொலிசாரினால் கடந்த 13.3.2016 அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post