G7 மாநாட்டில் பங்கேற்பதற்கு இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜேர்மனியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளதாக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (17) கொழும்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே G7 மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.