Breaking
Tue. Mar 18th, 2025

குளியாபிடிய சிறுவனுக்கு பாடசாலை அனுமதி தொடர்பான ஒப்பந்தத்தில் கண்டி டிரினிடி கல்லூரி அதிபர் மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

குளியாபிடிய பகுதியிலுள்ள சிறுவன் ஒருவனின் தந்தை சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு எயிட்ஸ் நோய் இருந்ததாகவும் அதனால், குறித்த சிறுவனுக்கும் எச்.ஐ.வி இருக்குமென வதந்தி  பரவியது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கருதி குறித்த பாடசாலையிலுள்ள மற்றைய மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுத்தமையால், குறித்த சிறுவனுக்கு கல்வி கற்று வந்த பாடசாலையில் தொடர்ந்து கற்றல் செயற்பாடுகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post