Breaking
Fri. Nov 22nd, 2024

ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை கண்டிபிடிக்கவில்லை என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி சர்ச்சைக் கூறிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி “ எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கு இல்லையா (ஐபோனை காட்டியப்படி), இதில் உள்ள கிட்டத்தட்ட அனைத்தும் அமெரிக்க அரசின் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சியில் இருந்து வந்தது.

ஜி.பி.எஸ். எல்.இ.டி. பிளாட் திரை, டிஜிட்டல் கேமரா, வயர்லெஸ் தரவு சுருக்கம் உட்பட முக்கியமான அனைத்தும் அரசின் ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஐபோனை உருவாக்கினார். ஆனால் அதில் உள்ள முக்கிய தொழில்நுட்பங்கள் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களால் கண்டிபிடிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

நான்சி பெலோசியின் கருத்தை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்று சிலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

By

Related Post