‘ஒபாமா அடிக்கடி ஐ.எஸ் பற்றி பேசுகிறார். ஓகே… இந்த உலகில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆயுத சப்ளை செய்வது யார்? சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியிருப்பவர்கள் யார்? இது போன்ற ஒரு குழப்பமான நிலையை அந்த நாட்டில் உருவாக்கியவர்கள் யார்? போரிடுபவர்களுக்கு ஆயுத சப்ளை செய்பவர்கள் யார்?
ஆசாத் அரசுக்கு எதிராக போரிடுபவர்கள் உண்மையில் யார் தெரியுமா? அவர்கள் அனைவரும் கூலிப்படையினர். அவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தருபவர்கள் பக்கம் சார்ந்து போரிடும் கூலிப் படையினர். இவர்கள் கைப்பற்றிய இடங்களில் உள்ள எண்ணெய் வயல்களையும் தனதாக்கிக் கொள்கின்றனர் இந்த கூலிப்படையினர். ஈராக், லிபியா, சிரியா என்று எந்த நாடுகளை எடுத்துக் கொண்டாலும் இதுதான் நிலை. பிறகு கைப்பற்றப்பட்ட எண்ணெய் வயல்களிலிருந்து பெட்ரோலும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது.
இவ்வாறு திருட்டுத் தனமாக பெட்ரோலை உலக நாடுகளுக்கு விற்பது யார்? வாங்குவது யார்? என்ற விபரம் அமெரிக்காவுக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? எல்லாம் தெரிந்தே நடைபெறுகிறது. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கும்போது பெயரளவில் மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டு மழை பொழிந்து அந்த மக்களை நாசமாக்குவார்கள். அந்த இடங்களில் உள்ள பொது மக்கள் உயிர் பிழைக்க ஐ.எஸ் இல் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுவர். இவை அனைத்தும் அரசியல் சித்து விளையாட்டுக்கள்’
என்று அனைத்து பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் விளாடிமிர் புடின்.