Breaking
Fri. Jan 10th, 2025
– அஸ்ஹர் இப்றாஹிம் –
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரணதரப் பரீ்ட்சை முடிவுகளின்படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி ஆகியவற்றிலிருந்து 415 மாணவ மாணவிகள் க.பொ.த. உயர்தரப் பிரிவில் விஞ்ஞான , வர்த்தக , கலை மற்றும் தொழில்நுட்பவியல் துறைகளில் கல்வி கற்க தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
கல்முனை வலயத்திலுள்ள பாடசாலைகளுள்ளும் , அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளள்ளும் , அகில இலங்கையிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள்ளும் இவ்விரு கல்லூரிகளிலுமிருந்து பெரும் எண்ணிக்கையிலான மாண மாணவிகள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளமை வரலாற்றில் இது முதற்தடவையாகும்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து 4 மாணவர்கள் 9 பாடங்களிலும் , 6 மாணவர்கள் 8 பாடங்களிலும் , 5 மாணவர்கள் 7 பாடங்களிலும் , 7 மாணவர்கள் 6 பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்றுள்ளதுடன் மொத்தமாக 180 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதியும் பெற்றுள்ளனர்.
கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியில் தமிழ்மொழிமுலம் 7 மாணவிகளும் , ஆங்கில மொழிமுலம் 4 மாணவிகளுமாக மொத்தம் 11 மாணவிகள் 9 பாடங்களிலும் , தமிழ் மொழி முலம் 16 மாணவிகளும் , ஆங்கில மொழி முலம் 5 மாணவிகளுமாக 21 மாணவிகள் 8 பாடங்களிலும் , 20 மாணவிகள் 7 பாடங்களிலும் ” ஏ” சித்தி பெற்றுள்ளதுடன் உயர்தரம் கற்க 235 மாணவிகள் தகுதியும் பெற்றுள்ளனர்.
பரீட்சையில் சித்தியடைந்த மாண மாணவிகளுக்கும் , கற்பித்த ஆசிரியர்களுக்கும் , பகுதித்தலைவர்களுக்கும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி அதிபர் எம்.எச்.நவாஸ் ஆகியோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Related Post