ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ் கடந்த 22-ம் தேதி குரில் தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது ஜப்பான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்த சில தினங்களில், ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள குரில் தீவுகளை ரஷ்யா ஆக்கிரமித்தது.
இத்தீவுக்கு, ஜப்பானும் உரிமை கொண்டாடுவதால், தீவு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை 70 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், டிமிட்ரியின் இப்பயணத்திற்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.