Breaking
Mon. Dec 23rd, 2024

– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் –

நாம் மட்டும் கற்றுவிட்டோம் என்று நினைக்காமல் எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வறுமையினை காரணம் காட்டி கல்விக்கு முடிச்சு போடவோமெனில் எமது சமூகம் 3 ஆம் தரத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார்.

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 15 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு கல்வி மற்றும் சமூக நலன் மேம்பாட்டுக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஸ்ரப் புலமை பரிசில் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (16) கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக வடக்குக்கு வெளியில் வாழும் 100 மாணவர்கள் நன்மையடையவுள்ளனர்.இவர்களின் கல்விக்காக தனது பாராளுமன்ற காலத்தில் பெற்றுக்கொண்ட சம்பளத்தினை ஒன்றுதிரட்டி 30 இலட்சம் ரூபாவினை அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த நிதியத்தின் மூலம் இன்று பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ருப்,கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.ஜெமீல்,அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் செயலாளர் எம்.முபாரக்(மதனி),நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் உள்ளிட்ட பெருந்தொகையான வர்த்தகர்கள்,மற்றும அமைச்சுக்களின் செயலாளர்கள்,துறைசார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்ந்து உரையாற்றும் போது

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஆயுதத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் ஜனநாயக விழுமியங்களை ஏற்றுக் கொண்டு அதனை நேசிக்கும் சமூகத்தின் முக்கியஸ்தர்களாக மாற வேண்டும் என்ற சிந்தனையினை கொண்வராக மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இருந்தார்கள்,இவர்களது அரசியல் காய் நகர்த்தல்கள்,சாண்கியத்தனம் என்பன முன்று ஜனாதிபதிகளை பதவியில் அமர்த்த தளம் அமைத்துக்கொடுத்தது மட்டுமல்லாமல் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் இன்றி எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்கின்ற முஸ்லிம்களின் வாக்குப்பலத்தினை வெளிப்படுத்திக் காட்டினார்.

அது மட்டுமல்லாது முஸ்லிம்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் பலமிக்கவர்களாக மாற வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் இறுக்கமான பல செயற்பாடுகளை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் நிகழ்த்திக்காட்டினார்.தென்பகிழக்கு பல்கலைக்கழகம் அது போன்று ஒலுவில் துறைமுகத்திட்டம் என்பன இதில் பிரதானமானதாகும்.இப்படிப்பட்ட நல்ல மனித நேயம் கொண்ட ஒரு அரசியலை் தலைவரின் இன்றைய நினைவு நிகழ்வில் நாம் அவர் தொடர்பிலும் பார்க்க வேண்டியுள்ளது.

இன்று எமது நாட்டில் நாம் பார்க்கின்ற போது எமது சமூகம் கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது.எமது மாணவர்கள் பல்கலைக்கழத்திற்கு தெரிவாகின்ற போது அவர்கள் கலைத் துறையினை மட்டும் விரும்பி கற்கின்றார்கள்.இதன் மூலம் அவர்கள் சாதாரண அரச நியமனங்களை பெற்று தமது பணியாற்றுகின்றனர்.இன்று எமது சமூகத்தின் வைத்தியர்கள்,பொறியிளலாளரகள்,நிர்சவாக துறை சார்ந்த அதிகாரிகளை தேடிப்பார்ப்பது என்பது மிகவும் அரிதாகும்.இதன் மூலம் நாம் எமது சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய பல நலவுகளை இழந்துள்ளோம்.

குறிப்பாக என்னைப் பொறுத்த வரையில் நான் அனுபவித்த துன்பங்கள்,துயரங்கள்,இழப்புக்கள் என்பன இன்று என்னை உயர் நிலைக்கு கொண்டுவந்துள்ளது.எமது சமூகம் உடுத்த உடையுடன் அன்று 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட போது அதில் ஒருவனாக நானும் வெளியேறினேன்.நாம் வாழ்ந்தது அகதி முகாமில் தான்,நான் எனது குடுமடபத்தில் முத்த பிள்ளை என்பதால் பொருளாதார சுமையினை நன்கறிந்தவனாக இருந்தேன்,ஆனால் எனது இலட்சியம் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்பதே.இறைவனின் அருளால் எனது பெற்றோரின் உந்துதலால் அந்த நிலையினை அடைவதற்கு நான்பபட்ட கஷ்டங்கள் இன்று ம் எனது மணக் கண் முன் காட்சியாக இருக்கின்றது.இந்தக்காட்சி தான் ஏனைய எமது சகோதரர்கள் சிறந்த கல்வியியலாராகவும்,துறை சார்ந்தவர்களாகவும் வரவேண்டும்இதற்காக எதனை செய்ய முடியுமோ அதன செய்ய நான் முனைகின்றேன்.“

இன்றைய காலம் என்பது மிகவும் கவனமாக செயற்பட வேண்டிய காலமாகும்.கல்வியில் மட்டும் கண்ணும் கருத்துமாக மாணவர்கள் இருக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன்.மாணவ பருவம் என்பது எப்போதும் எமக்கு கிடைக்கப் போவதில்லை உரிய காலத்தில் நாம் செய்கின்ற விளைச்சல் தான் நல்ல அறுவடையினை தரும் என்ற நம்பிக்கை கொண்டவன்.எல்லோருக்கும் இறைவன் எல்லா வாய்ப்புக்களையும் ,வசதிகளையும்,திறமைகளையும் கொடுப்பதில்லை.ஆனால் நாம் விடாத முயற்சிகளை செய்கின்ற போது தான் எமது இலட்சியத்தின் சுவையினை நுகர முடியும்.

இந்த வகையில் இன்றைய நவீன தொழில் நுட்பங்களுடன் எமது வாழ்வினை மிகவும் அவதானமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.எமக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பம் ஒரு அமானிதமாகும்.இதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.இல்லையேல் நாம் இரு உலகிலும் நஷ்டம் அடைந்தவர்களாக மாறிவிடுவோம்.அமைச்சுப் பதவிகள் என்பது பெருமைக்குள்ளது அல்ல,இது மக்களுககு பெறுமதிமிக்க பணியினை ஆற்றுவதற்காக கிடைத்தொன்று,இதனை வைத்துக்கொண்டு பெருமையடிக்க வேண்டும்.

இறைவன் எதனை நாடுகின்றானோ அதனை தான் நாங்கள் அடைய முடியும்,இயற்கையின் நியதிகளுக்கு மாறாக நாம் செயற்படுகின்ற போது ஒரு போதும் அதில் எமக்கு விமோசனம் இல்லை என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.அன்று கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் இன்று மற்றவரிடம் யாசிக்கும் நிலைக்கு மாறியுள்ளனர்.உயர் பதவிகளில் இருந்தவர்கள் இன்று அதில் இல்லை,இருக்கின்ற போது அதனை வாரி வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்கள் கற்றலில் ஆர்வம் கொள்வார்கள்.இதன் மூலம் அல்லாஹ்வின் அருளும்,அன்பும் எம்மை வந்து சேரும்,

எதிர்கால சமூகத்தினை உருவாக்கும் பணியினை பொறுப்பெடுக்க வேண்டியவர்கள் நீங்கள்,பல்கலைக்கழகத்தில் கற்றும் காலத்தில் ஒழுக்க விழுமியங்களை பேணி,கலாசாரத்தினை பிரதி பலிக்கும் வகையில் தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளவேண்டும்,

இந்த புலமைப் பரிசில் திட்டம் போன்று தனவந்தர்கள் நீங்களும் முன்வந்து இது போன்று பணிகளை செய்ய வேண்டும்.மரஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் ஆரம்பித்த நளீமியா பீடம் அந்த பணியினை செய்கின்றது.இது போன்ற பணிகளுக்கு உதவும் அனைவரது வாழ்விலும் பறக்கத்தையும்,அருளையும் பொழிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் கூறினார்.

Related Post