எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளில் ஒன்று கத்தார். இதன் தலைநகர் DOHAவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
இங்கு வருகை தரும் விமான பயணிகளுக்கு 35 ரியால் அதாவது ரூ.1400 நுழைவு வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் டிக்கெட் எடுப்பவர்களிடம் கட்டணத்துடன் சேர்த்து நுழைவு வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் அது டிசம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதில் 2 வயதுக்கு கீழ் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் குழந்தைகளுக்கு அது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் காலாண்டில் தோகா விமான நிலையத்துக்கு 90 லட்சம் பயணிகள் வந்து சென்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எண்ணெய் வளம் மிக்க கத்தார் 2022-ம் ஆண்டில் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு 2016 பட்ஜெட்டை ரூ.1200 கோடி அமெரிக்க டாலர் பற்றாக்குறையுடன் செயல்படுத்தி வருகிறது. அது கடந்த 15 ஆண்டுகளில் கத்தாருக்கு ஏற்பட்ட மிக பின்னடைவாக கருதப்படுகிறது.
தற்போது சர்வதேச அளவில் எண்ணெய் விலை சரிந்து வருவதால் வரும் ஆண்டுகளிலும் பற்றாக்குறை பட்ஜெட் தொடரும் நிலை உள்ளது. எனவே பொருளாதார நிலையை சரிக்கட்ட இந்த நுழைவு வரி விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.