வில்பத்தை அண்டிய பகுதியில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் குடியேறியவர்களை வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (07) ஞாயிற்றுக்கிழமை கையொப்ப வேட்டை ஒன்று ஆரம்பமாகிறது. மரிசிக்கட்டியில் முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீகத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் உடைந்து, தூர்ந்து போய்க் கிடக்கும்பள்ளிவாசலுக்கு அருகில் இந்த கையொப்ப வேட்டை அமைச்சர் ரிஷாத் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
சுமார் 2 இலட்சம் முஸ்லிம்களின் கையொப்பங்களைத் திரட்டும் இன்றைய முதல் நாள் வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விஸ்தரிக்கப்பட்டு நாட்டிலுள்ள 2,000 பள்ளிவாசல்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் பின்னர் இவை கோரிக்கை கொண்ட ஆவணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. எனவே, இந்தக் கையொப்ப வேட்டைக்கு அனைவரும் ஒத்துழைத்து அதன் மூலமாவது வடபுல முஸ்லிமகளின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்தி அவர்கள் நிம்மதியான, நிரந்தர வாழ்வுக்கு பங்களிப்புச் செய்வோமாக!
இது தொடர்பாக காலத்தில் இறங்கியுள்ள RRT சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர் சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் மடவளை நியுசுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி…..
மேலதிக விபரங்களுக்கு
சட்டத்தரணி ருஷ்டி ஹபீப்… 0774440019