Breaking
Sun. Jan 12th, 2025

SLTJ ஊடகப் பிரிவு

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மருதமுனைக் கிளையினால் ஜும்மா தொழுகை நடத்தப் படுவதற்க்கு எதிராக மருதமுனை – அனைத்துப் பள்ளிகள் சம்மேளனம் சார்பில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் ஜும்மா தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டது. 

கல்முனை நீதவான் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கல்முனை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கில் இன்று (30.03.2015) தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதவான் நெடுஞ்சலியன் அவர்கள் இன்று வழங்கிய தீர்ப்பில் தவ்ஹீத் ஜமாத்தின் ஜும்மா உள்ளிட்ட எந்த செயல்பாட்டையும் தாரளமாக முன்னெடுக்க முடியும் எனவும், SLTJ யின் செயல்பாட்டை நிறுத்துவதற்க்கு யாருக்கும் அனுமதியில்லை எனவும் கூறியதுடன்மற்றவர்களின் மத உரிமையை பறிக்கும் விதமான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என மருதமுனை – அனைத்துப் பள்ளிகள் சம்மேளனத்திற்க்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் சட்டத்தரணிகளான ரமீஸ் பசீர்பாருக் ஆகியோர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்

Related Post