திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூதூர் இக்பால் நகர் மைதானம் விளையாட்டு கழகங்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (02) ஜாயா வட்டார அமைப்பாளர் லாபிர் தலைமையில் இடம்பெற்றது
சுமார் 30 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இம் மைதானம் அப்பகுதி விளையாட்டு வீரர்கள் கழகங்கள் இணைந்து விடுத்த கோரிக்கைக்கு அமைய இது நிருமானிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்கள் கலந்து திறந்து வைத்தார்.
இதில் மூதூர் மத்திய குழு தலைவர் சியான் (PHI), மத்திய குழு செயலாளர் நுஸ்ரி உட்பட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
மைதான திறப்பு நிகழ்வை முன்னிட்டு சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியும் இடம்பெற்றது