வெளியாகியுள்ள 2014ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கொழும்பு, நாலந்த கல்லூரியைச் சேர்ந்த எல். தரிந்து நிர்மால் விக்கிரமசிங்ஹ சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம், முதல் 10 இடங்களை பெற்றுகொண்ட மாணவர்களின் விவரங்கள்:
1. எல். தரிந்து நிர்மால் விக்கிரமசிங்ஹ – நாலந்த வித்தியாலயம், கொழும்பு
2. டப்ளியு. ஏ. சந்துனி நவன்ஜனா – ஹொலி க்றோஸ் கல்லூரி, கம்பஹா
3. அமஷி நிவர்தனா – விசாகா கல்லூரி, கொழும்பு 3. எஸ்.ஏ.நுவனி நெத்சரணி – ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயம், கம்பஹா
3.ஏ.ஏ.குருணி ஹங்சபானி அபேசிங்ஹ – மஹாமாய மகளிர் வித்தியாலயம், கண்டி
4.தேவினி ருவன்கா ஹேமசிங்ஹ – விசாகா கல்லூரி, கொழும்பு
5.ஆர்.டப்ளியு.திவாஞ்சலி உத்தரா ராஜபக்ஷ – தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு
6.எச்.கே.ரன்சிக லசன் குணசேகர – தேர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு
6.திலினி சதுனிகா பளிஹக்கார – சுஜாதா வித்தியாலயம், மாத்தறை
6.அஞ்சன ருஷிக அபயதீப மதரசிங்ஹ – மொரவக்க கீர்த்தி அபேவிக்ரம மத்திய மகா வித்தியலாயம், தொரவக்க.