Breaking
Mon. Dec 23rd, 2024
க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழுத் தலைவர் என்ற வகையில் தமது கடமைகள் எவ்வாறு அமையும் என்பதனை தெரிந்து கொள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சபாநாயகரை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியதாக அமைச்சரின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post