Breaking
Tue. Dec 24th, 2024

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேசியப் பட்­டி­யலில் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்த ஜே.ஸ்ரீரங்கா, பிர­பா­க­ணேசன்,  பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ்,   டியு. குண­சே­கர,  திஸ்­ஸ­வி­தா­ரன மற்றும் திஸ்ஸ அத்­த­நா­யக உள்­ளிட்ட 11 பேர் முன்­ன­ணியின் தேசியப் பட்­டி­ய­லி­ருந்து நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு தேசியப் பட்­டியல் ஊடாக 12 ஆச­னங்கள் கிடைக்­கப்­பெற்­றி­ருந்த நிலையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை முன்­னணி அதற்­கான உறுப்­பி­னர்­களை நிய­மித்து உத்­தி­யோக­பூர்­வ­மாக அறி­வித்­தி­ருந்­தது.

தேர்­தல்­க­ளுக்கு முன்­ப­தாக முன்­ன­ணி­யினால் பெய­ரி­டப்­பட்­டி­ருந்த பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ்,

திஸ்ஸ விதா­ரண,

டியு.குண­சே­கர,

திஸ்ஸ அத்­த­நா­யக்க,

ரெஜினோல்ட் குரே,

ஜே. ஸ்ரீரங்கா,

பிர­பா­க­ணேசன்,

ஜீவன் குமா­ர­துங்க,

டிரான் அலஸ்,

பேராசி­ரியர் ரஜீவ விஜே­ய­சிங்க மற்றும் பிய­சிறி விஜே­ய­நா­யக்க

ஆகிய 11 பேரின் பெயர்கள் நீக்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை டிலான் பெரேரா, ஏ.எச்.எம். பௌசி, கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ் தபா ஆகியோருடன் தேர்தலில் தோல்வி யடைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணியின் உறுப்பினர்கள் அடங்கிய 12 பேர் தேசியப்பட்டியலின் ஊடாக பாராளு மன்றத்திற்கு உள்வாங்கப்பட்டு ள்ளனர்.

Related Post