வில்பத்து காட்டுப் பகுதியில் அத்துமீறி முஸ்லிம் குடியேற்றத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்வதாக மேற்கொள்ளப்பட்டுவரும் அபாண்டம் தொடர்பில் நேற்று அமைச்சரவையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடத்தில் அமைச்சரவை உப-குழுவொன்றினை நியமித்து விசாரனையொன்றினை செய்யுமாறு கோறியுள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த வேண்டுகோளை பகிரங்கமாக விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக சில ஊடகங்களும்,இனவாத அமைப்புக்களும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக வடமாகாணத்துக்கு உட்படாத வடமேல் மாகாணத்திற்குட்பட்ட வில்பத்து காட்டினை அழித்து பிற மாவட்ட முஸ்லிம்களை குடியேற்றுவதாக மேற்கொண்டுவரும் விசமப் பிரசாரம் தொடர்பில் அமைச்சரவையினையும் அமைச்சர் சிறிது நேரத்திற்குள் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதே வேளை அரசாங்கத்துக்கு பொறுப்பிருக்கின்றது இது தொடர்பில் ஆராயந்து உண்மையினை வெளிப்படுத்த என அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாவது –
அமைச்சரவை உபகுழு அமைப்பது தொடர்பிலும்.அதனை விட தனது அமைச்சின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அதன் பிற்பாடு தங்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் கூறியுள்ளார்.