Breaking
Wed. Dec 18th, 2024

-ஊடகப்பிரிவு-

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கெக்கிராவ பிரதேச சபைக்கு கனேவல்போல வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்ட ஹபீல் ஆசிரியர் பல சவால்களுக்கு மத்தியில் தேர்தலில் வெற்றியீட்டினார்.

அந்த வகையில், கனேவல்பொல தேர்தல் தொகுதிக்குட்பட்ட கனேவல்பொல, நிக்கவெவ, ரம்பேவ, ஹீனுக்கிரியாவ, எட்டிவீரவெவ, கந்துபோட ஆகிய பிரதேசங்களில் அணிதிரண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிழும் கூட்டங்கள் நேற்று (25) நடந்தேறின. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், ஹபீல் ஆசிரியர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முஹம்மட் மற்றும் கட்சியின் பல முக்கிய உறுப்பினர்களும் இந்தக் கூட்டங்களில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் தேர்தலில் எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்,  அப்பிரதேச மக்களின் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் வெகுசீக்கிரத்தில் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். குறிப்பாக, வீடுகளுக்கும், கடைகளுக்கும் உறுதிப்பத்திரம் இல்லாதவர்கள் இன்று 26.02.2018 தங்களது முழு விபரத்தோடு கலாவெவையில் அமைந்திருக்கும் தனது காரியாலயத்தில் வந்து ஒப்படைக்குமாறும், அவர்களுக்கான உறுதிப்பத்திரங்களை குறிப்பிட்டதொரு கால எல்லைக்குள் பெற்றுத்தருவதாகவும் கூறினார்.

 

 

 

Related Post