Breaking
Tue. Jan 7th, 2025

களுத்துறைவாழ் அன்பு பொதுமக்களே!

இந்த ஊரில் மக்களின் பாரிய எதிர்பார்ப்பு ஒன்று எம்மால் நிறைவேற்றப்பட வாய்ப்பளித்த வல்ல இறைவனுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்!

தேர்தல் மேடைதோறும் நாகரீகத்தின் எல்லா எல்லைகளையும் கடந்து விமர்சிக்கப்பட்ட எமது தலைமையும் கட்சியும் நாமும் இன்று இவ்வூர் முஸ்லிம் சமூகத்தின் மீதான அக்கறையை நிரூபித்துள்ளோம்.எமது வருகை முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்தை இல்லாமலாக்கும் என தொண்டைகிளிய கத்தியவர்களின் பொய்யை எமது வருகையின்மூலம் பொய்ப்பித்துள்ளோம்.

சமூகத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான வாக்குகளை அள்ளிக்கொண்டு வென்றவர்கள் இவ்வூரின் கௌரவத்தை காற்றில் பறக்கவிட்டபோதும் எமது சொற்ப வாக்குகளால் இவ்வூரின் மானத்தையும், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும் பாதுகாத்துள்ளோம் என்பதில் நாம் சந்தோஷமடைகின்றோம்.

நாங்கள் அற்ப பதவிகளுக்காகவோ, சலுகைகளுக்காகவோ விலைபோகக்கூடியவர்கள் இல்லை என்பதையும், சமூக அக்கறையை முதன்மைப்படுத்தி அரசியல் செய்ய வந்தவர்கள் என்பதையும் நிரூபித்துள்ளோம். அதுமட்டுமல்ல, உதவி நகரபிதாவுக்கான வாக்கெடுப்பில் சமூகம் தோற்றத்தில் பங்காளியாகாமலும் பெரும்பான்மை வெல்வதில் பங்காளியாகாமலும் எமது அரசியல் சாணக்கியத்தை நிரூபித்துள்ளோம்.

இன்ஷா அல்லாஹ்! மீண்டும் மீண்டும் உரத்துச் சொல்கிறோம். யானைக்கு வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்குகளால் பெறமுடியாமல் தவித்த நகரபிதா பதவியை, மயிலுக்கு வழங்கப்பட்ட வெறும் நூற்றுக்கணக்கான வாக்குகளைக் கொண்டு இவ்வூருக்கு பெற்றுக்கொடுத்துள்ளதை, எம்மை மேடைபோட்டு விமர்சித்த சில்லறை அரசியல் “மேதை”களுக்கு ஞாபகமூட்டிக்கொள்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ்! எமது அரசியல் பயணம் சமூக அக்கறைக்கப்பால் நகராது எனும் வாக்குறுதியையும் வழங்கி எம்மை தேர்ந்தெடுத்து இப்பணிக்கு உரமூட்டிய அன்பு வாக்காளர்களை நன்றியுணர்வோடு ஞாபகமூட்டிக்கொள்வதோடு விடைபெறுகிறோம்.

நன்றி.

இவ்வண்ணம் 
நன்றியுடன் 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 
களுத்துறை

Related Post