Breaking
Tue. Jan 7th, 2025

வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சின் கீழ் உள்ள” செமட செவன” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான  வீட்டுத் திட்டம் வழங்கும் நிகழ்வு துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு இன்று (05) பிரதி அமைச்சரின் கிண்ணியா மத்திய காரியாலயத்தில் இடம் பெற்றது.

கிண்ணியா நடுவூற்று பகுதியில் அமையவுள்ள மாதிரிக் கிராம வீட்டுத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 100 பயனாளிகளுக்கே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

பயனாளிகளுக்கான பத்திரங்களை பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா வழங்கி வைத்தார்.

துறை முகங்கள் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவினால் இத் திட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் , பிரதியமைச்சரின் சக உத்தியோகத்தர்களான நஜிமுதீன், றியாத் உள்ளிட்டோர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டார்கள்.

Related Post